நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சேலம்: தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி நேற்று தனது சொந்த ஊரான இடைப்பாடி, நெடுங்குளம் சிலுவம்பாளையத்தில் இருக்கும் வீட்டுக்கு வந்தார்.
அங்கு தனது அம்மா, அண்ணனை பார்த்து விட்டு இடைப்பாடியில் நடந்த ஒரு கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நேற்றிரவே சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில் 108க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியின் சிலுவம்பாளையம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளோம். அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு அந்த மர்ம நபர் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இந்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள் அமைச்சர் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இந்த மர்ம மிரட்டல் தொடர்பாக பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications