கேரள காங்கிரசாருக்கு கூட தெரியாமல் குருவாயூர் கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்
குருவாயூர்: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு திடீர் விஜயம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவசர, அவசரமாக தரிசனத்தை முடித்து கொண்டு திரும்பினார். இது குறித்து கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அறிவிக்கப்படவில்லை.
கேரள மாவட்டம், திருச்சூர் மாவட்டத்தில் பிரபலமான குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் காலையில் திடீரென காரில் வந்து இறங்கினார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு காலை 11.30 மணியளவில் குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றார்.
சாதரண பக்தர்களை போல வேட்டி மற்றும் மேல் துண்டுடன் கோவிலுக்கு வந்தார். இதனால் கோவிலில் இருந்த பக்தர்களுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.
கோவிலுக்குள் நுழைகையில் சிதம்பரத்தை கோவில் நிர்வாக அதிகாரி வேணுகோபால் வரவேற்றார்.
சிறிது நேரத்தில் அவரை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தவுடன் கூட்டம் அதிகரித்தது. இதனால் 20 நிமிடங்களில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். அங்கிருந்தும் சில நிமிடங்களில் புறப்பட்டுவிட்டார்.
மத்திய அமைச்சர் சிதம்பரம் வருகை குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள், முதல்வர் உம்மன் சாண்டி, போலீசார் உட்பட யாருக்கும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications