For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

26 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியதால் ரோபக் தற்கொலை!

Google Oneindia Tamil News

Peter Roebuck
மெல்போர்ன்: இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் எழுத்தாளருமான பீட்டர் ரோபக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. ஹோமோ செக்ஸ் பழக்கம் கொண்ட ரோபக், ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 26 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்து கைது செய்ய போலீஸார் வந்ததால் பயந்து போய் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பீட்டர் ரோபக். இவர் பிரபலமான கிரிக்கெட் எழுத்தாளர் மற்றும் டிவி வர்னணையாளர் ஆவார். ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர். இங்கிலாந்தின் சோமர்செட் அணியில் விளையாடியுள்ளார். அப்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ்குக்கு எதிராக இனவெறியுடன் இவர் செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன.

கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் எழுத்தாளராக மாறினார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் தங்கியிருந்தபோது அங்குள்ள ஹோட்டலின் 6வது மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். இதில் அவர் உயிரிழந்தார்.

அவரது மரணம் குறித்த மர்மம் தற்போது விலகியுள்ளது. பீட்டர் ரோபக் ஒரு ஹோமோ செக்ஸ் பேர்வழி ஆவார். ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 26 வயது மாணவனிடம் அவர் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாணவன் போலீஸில் புகார் கூறியிருந்தார். இதையடுத்து பீட்டர் ரோபக்கை விசாரிப்பதற்காக போலீஸார் ஹோட்டலுக்குச் சென்றனர். இதனால் அச்சமடைந்த அவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து விட்டதாக அவரது நண்பரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வர்னணையாளருமான ஜிம் மாக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பும் வகையில் தற்கொலை முடிவை பீட்டர் எடுத்து விட்டதாக மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். இத்தகவலை போலீஸார் தன்னிடம் கூறியதாக மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில், ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 26 வயது மாணவருடன் தகாத முறையில் நடந்து கொண்டார் பீட்டர் ரோபக். இதையடுத்து நாங்கள் அங்கு சென்று அவரைக் கைது செய்ய முயன்றோம். ஆனால் எங்களிடமிருந்து தப்ப பீட்டர் ரோபக் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு முன்புதான் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் ரோபக். தான் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதாகவும், ஒரு வக்கீலின் உதவி தேவை என்றும் என்னிடம் அவர் கூறினார்.அவரது குரல் மிகவும் பதட்டமாக இருந்தது என்றார் மேக்ஸ்வெல்.

55 வயதான ரோபக், சோமர்செட் அணியின் நீண்ட கால தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர். 80களில் இந்த அணிக்காக அவர் ஆடிக் கொண்டிருந்தார். தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டிகளைக் கவர் செய்வதற்காக அவர் கேப்டவுன் வந்திருந்தார்.

மேக்ஸ்வெல் மேலும் கூறுகையில்,எனக்குப் போன் செய்தவுடன் நான் ஹோட்டலுக்கு விரைந்தேன். ஆனால் அங்கு அதற்குள் போலீஸார் வந்திருந்தனர்.அவர்கள் என்னை ரோபக்கை சந்திப்பதற்கு ஆரம்பத்தில் அனுமதிக்கவில்லை. பின்னர்தான் அனுமதித்தனர். பிறகு நான் போய் ரோபக்கைப் பார்த்து விட்டு வெளியேறினேன். அதற்கு அடுத்த ஒரு நிமிடத்தில்தான் அவர் மாடியிலிருந்து குதித்து விட்டார்.

ரோபக்கின் தற்கொலைக்கு வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை. கைது நடவடிக்கையிலிருந்து தப்பவே அவர் தற்கொலைக்குப் போய் விட்டார். மிகவும் பயந்த நிலையில் இருந்தார் ரோபக்.

அவர் மிகத் திறமையானவர். நல்ல எழுத்தாளர். நினைத்தவுடன் அவரால் 1000 வார்த்தைகளை எழுத முடியும். நல்ல வர்னணையாளராகவும் அவர் விளங்கினார். ஏபிசி நிறுவனத்திற்காக சிறப்பாக செயல்பட்டார். பாசத்தையும் வெளிக்காட்டக் கூடியவர். ஆனால் அவருக்குள் இப்படி ஒரு சிக்கல் இருந்திருக்கிறது என்றார் மேக்ஸ்வெல்.

English summary
Australian cricket commentator Jim Maxwell has confirmed his colleague Peter Roebuck was about to be detained for questioning over an alleged sexual assault when he apparently jumped to his death from his hotel room in Cape Town, South Africa. Maxwell, who worked with renowned writer and analyst Roebuck on the Australian Broadcasting Corporation's radio cricket coverage, said police told him they were about to detain Roebuck over allegations made by a Zimbabwean man in his 20s. In an ABC interview, Maxwell said Roebuck telephoned him in an "extremely agitated and desperate state," telling him he needed help in finding a lawyer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X