நீதிபதியின் படத்தை தவறாக காட்டிய டைம்ஸ் நவ் டிவிக்கு ரூ.100 கோடி அபராதம்
மும்பை: பிஎப் ஊழல் முறைகேடு குறித்த செய்தியின்போது முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த்தின் படத்தைத் தவறாக காட்டியதற்காக டைம்ஸ் நவ் டிவிக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பாம்பே உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் வழக்குக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் டைம்ஸ் நவ் டிவி பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நாட்டை உலுக்கிய பிஎப் பண ஊழல் விவகாரத்தில் பல்வேறு நீதிபதிகளுக்குத தொடர்பு இருப்பதாக கூறி டைம்ஸ் நவ் டிவி ஒரு செய்தியை ஒளிபரப்பியது. அப்போது தவறுதலாக அதில், சம்பந்தப்படாத முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த்தின் படம் காட்டப்பட்டது. கிட்டத்தட்ட 15 விநாடிகள் அந்தப் படம் காட்டப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பி.பி.சாவந்த் டைம்ஸ் நவ் டிவிக்கு மன்னிப்பு கோரியும், ஐந்து நாட்களுக்கு தனது மன்னிப்பை தொடர்ந்து டிவி நிறுவனம் வெளியிட வேண்டும் என்று கோரியும் கடிதம் எழுதினார். ஆனால் அதை கண்டு கொள்ளவில்லை டைமஸ் நவ்.
இதையடுத்து புனே மாவட்ட கோர்ட்டில் நீதிபதி பி.பி.சாவந்த் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த கோர்ட் டைம்ஸ் நவ் டிவி ரூ. 100 கோடி அபராதம் செலுத்துமாறு அதிரடி உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாம்பே உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது டைம்ஸ் நவ்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் ரூ. 20 கோடி பணத்தை உடனடியாக டெபாசிட் செய்யுமாறும், மீதத் தொகைக்கு வங்கி உத்தரவாதத்தை அளிக்குமாறும் உத்தரவிட்டது.
இதையடுத்து டைம்ஸ் நவ் டிவி உச்சநீதிமன்றத்தை அணுகியது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அது தனது மனுவில் கூறியிருந்தது. ஆனால், இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் ரூ. 100 கோடி அபராதத்தை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது டைம்ஸ் நவ் டிவி நிறுவனம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications