For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் 3 இந்து டாக்டர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேர் கைது

By Siva
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவ சகோதரர்கள் 3 பேரைக் கொன்ற வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தின் சிகார்பூர் மாவட்டத்தில் உள்ள சக் டவுனில் கிளிக்கில் பணி புரிந்தனர் இந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் அஜீத் குமார், நரேஷ் குமார் மற்றும் அஷோக் குமார். அவர்கள் மூவரும் சகோதர்கள் ஆவர். கடந்த 7ம் தேதி வழக்கம்போல் கிளினிக்கில் இருந்த அவர்களை ஆயுதம் ஏந்திய சிலர் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.

இதில் சகோதரர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். பாகிஸ்தானில் இந்து மதத்தினர் கொல்லப்படுவது இது முதல் முறையன்று என்று அங்கு வாழும் இந்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

இரண்டு அமைப்புகளுக்கு உள்ள விரோதத்தில் மருத்துவர்கள் கொல்லப்பட்டனர். கொலையாளிகளின் இலக்கு அவர்கள் அல்ல என்று மாலிக் மேலும் தெரிவித்தார்.

English summary
Pakistan police have arrested 11 persons in connection with the murder of 3 hindu doctors in Sindh province on november 7, said interior minister Rehman Malik. The doctors were killed because of the rivalry between 2 groups, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X