பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
ஏரல்: ஏரல் அருகே 1 வயது பேத்தியை பிரிய மனமில்லாததால் தாத்தா ஒருவர் அந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கட்டலாங்குளம் புதூரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. அவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு சிவகாமி என்ற மனைவியும, சரஸ்வதி, அம்பிகா என்ற 2 மகள்கள். அதில் சரஸ்வதிக்கும், சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அவர்களுக்கு 1 வயதில் சுவேதா என்ற மகள் இருந்தார். சிவராமன் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தர்மபுரி மாவட்டம் நட்டாரம்பள்ளி அருகே நடந்த பேருந்து விபத்தில் சரஸ்வதி பலியானார். இதனால் குழந்தை சுவேதா தாத்தா சுடலைமுத்து பராமரிப்பில் இருந்து வந்தது.
இந்நிலையில் குழந்தை சுவேதாவை தன்னிடம் ஒப்படைக்குமாறு சிவராமன் கேட்டுள்ளார். பேத்தியை அவரிடம் அனுப்ப மனமில்லாத சுடலைமுத்து நேற்று தனது வீட்டில் உள்ள கிணற்றில் சுவேதாவை வீசி கொலை செய்து வி்ட்டு, அதே கிணற்றில் தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications