வேண்டாம் உதவி - மல்லையா பல்டி
பெங்களூர்: கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தைக் காப்பாற்றுமாறு தாம் அரசைக் கோரவில்லை என்றும், குறுகிய கால கடனாக ரூ 770 முதல் 800 கோடி வரை யாராவது கடனாகத் தரமுன்வந்தால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு எந்த வித பெயில் அவுட்டும் இந்திய அரசோ, அரசுத்துறை வங்கிகளோ தரக்கூடாது என நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இப்போது திடீரென பல்டியடித்துள்ளார் மல்லையா.
இந்திய மது விற்பனையில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்தும் அளவு ஆதிக்கம் செலுத்துபவர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். ரூ 4000 கோடி மதிப்பில் பெரும் அரண்மனை ஒன்றையும் கர்நாடகத்தில் இவர் கட்டி வருகிறார்.
அழகிகளின் அரைநிர்வாண காலண்டர் அடிப்பதற்கே பல கோடியைச் செலவிடும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம், இதுவரை ஒரு ஆண்டு கூட இவரது கிங்ஃபிஷர் நிறுவனம் இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்துக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாகச் செலுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே பலநூறு கோடி பாக்கியாக நிற்கிறது.
இப்படிப்பட்ட ஒரு தொழிலதிபருக்கும் அவரது முறையற்ற நிறுவனத்துக்கும் எதற்காக நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரும் எழுப்பும் கேள்வி. மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தை மூட வேண்டும் அல்லது அரசுடைமை ஆக்க வேண்டும் என்று அனைவரும் கோரத் தொடங்கியுள்ளதால் ஷாக்காகிவிட்ட மல்லையா, இப்போது அரசு உதவி வேண்டாம், அன்னிய முதலீட்டை அனுமதியுங்கள் என்று கோர ஆரம்பித்துள்ளார்.
ஆனால் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் அது பல மோசடியான செயல்களுக்கு அடித்தளமாகிவிடும் என்பதால், அனுமதிக்க முடியாது என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications