தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.70.38, பெங்களூரில் ரூ. 73.46

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.85 குறைத்துள்ளன. அதன்படி சென்னை உள்பட தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.35 குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 33 மாதங்களில் இப்போது தான் முதன்முதலாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் விலையைப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இதன் அடிப்படையில் கடந்த வாரம் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டது.

இப்போது ரூ. 1.85 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.22 குறைந்து ரூ.66.42 க்கும், சென்னையில் ரூ.2.35 குறைந்து ரூ.70.38க்கும், பெங்களூரில் ரூ. 2.43 குறைந்து ரூ. 73.46க்கும், மும்பையில் ரூ. 2.34 குறைந்து ரூ.71.47க்கும், கொல்கத்தாவில் ரூ.2.31 குறைந்து ரூ.70.84க்கும் விற்கப்பட்டுகிறது.

இது 2010ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின் நிகழும் முதல் விலை குறைப்பாகும். பெட்ரோல் மீதான விலை நிர்வாகக் கட்டுப்பாட்டு முறையை மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல பெட்ரோல் விலை நிர்ணயம் செய்துகொள்கின்றன.

நவம்பர் 22ம் தேதி நாடளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனையை இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் எழுப்ப முடிவு செய்திருந்தனர். அவர்களின் எதிர்ப்பை சமாளிக்கும் விதமாகவே மத்திய அரசு இவ்வாறு நாடகம் ஆடுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+