இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச்சு: புதுவை நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்
புதுவை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் புதுவை நீதிமன்றத்தில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார்.
புதுவையில் கடந்த ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளருமான சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக சீமான் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அவர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை புதுவை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி லீலாவதி முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது சீமான் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அதை வரும் டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications