For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எஸ்.எஸ்.எல்.சி. தனித் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

Google Oneindia Tamil News

மதுரை: எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி.க்கான தனித் தேர்வு முடிவு நாளை (நவம்பர் 18) வெளியிடப்பட உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி.க்கான தனித்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. மார்ச் மாதம் எழுதிய தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தனியாக எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. படித்தவர்கள் இந்த தனித்தேர்வில் பங்கேற்று எழுதினர்.

இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை (18 ந் தேதி) பிற்பகல் அரசு கல்வித்துறை இணைய தளங்களில் வெளியிடப்படுகிறது. இதற்கான 3 இணைய தள முகவரிகளை தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன் விவரம் பின் வருமாறு,

www.dge1.tn.nic.in,

www.dge2.tn.nic.in,

மேலும் தனித்தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் வரும் 25, 26ம் தேதிகளில் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். மறு கூட்டல் விண்ணப்படிவங்கள் வரும் 24, 25, 26ம் தேதிகளில் வினியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 26ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மறு கூட்டல் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், துணை இயக்குனர் அலுவலங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மண்டலத்தை சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், எழும்பூரில் உள்ள சென்னை வடக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், எழும்பூரில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், சூளைமேட்டில் உள்ள சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், சைதாப்பேட்டையில் உள்ள மத்திய சென்னை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் ஆகியவற்றில் 26ம் தேதிக்குள் மறு கூட்டல் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இதற்காக டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலகம், அரசு தேர்வுகள் இயக்கம் ஆகிய இடங்களுக்கு யாரும் செல்லக் கூடாது. மறு கூட்டலுக்கான கட்டணத்தை அரசு தேர்வுகள் இயக்குனர் பெயரில் டிராப்ட் எடுத்து செலுத்த வேண்டும்.

English summary
SSLC private examination results will released tomorrow in the official websites of Tamil Nadu Educational department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X