பஸ் கட்டணம் உயர்வு- ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: பேருந்துகளைவிட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் 10 முறைக்கும் மேல் டீசல் விலை உயர்ந்த போதிலும் ஏழை, எளிய,நடுத்தர மக்களின் நலன் கருதி பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் அதிமுக அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் பேருந்து கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளது.

செங்கோட்டையி்ல் இருந்து மதுரைக்கு தற்போது பேருந்து கட்டணம் 109 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு தினந்தோறும் 4 முறை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. அதற்கான கட்டணம் ரூ.25.

ஏற்கனவே செங்கோட்டை-மதுரை ரயிலில் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் தற்போது ரயில் கட்டணத்தை விட சுமார் பேருந்து கட்டணம் 5 மடங்கு அதிகமாகியிருப்பதால் மக்கள் ரயிலை நாடுகின்றனர்.

செங்கோட்டை-மதுரைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+