கள்ளத் தொடர்பில் பிறந்த பெண் குழந்தை குளத்தில் வீசி கொலை-தாய் உள்பட 3 பேர் கைது
சிவகிரி: சிவகரி அருகே கள்ளத்தொடர்பில் பிறந்த பெண் குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்த தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்குளம் ஆண்டவர் குளத்தில் நேற்று முன்தினம் காலை பச்சிளம் குழந்தையி்ன் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி ஜமீம், சிவகிரி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அமகது கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் வாசுதேவநல்லுர் அருகே உள்ள டி-ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகராஜா, அவரது மனைவி பரமேஸ்வரி, மகள் ஆனந்தி ஆகியோர் குழந்தையை குளத்தில் வீசிக் கொன்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குழந்தை கள்ளத் தொடர்பின் மூலம் பிறந்ததால் அதை குளத்தில் வீசிக் கொன்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications