தமிழகத்தில் அரிசி பயன்பாடு அதிகரித்துள்ளது: ஜெர்மனி பேராசிரியர்
நெல்லை: தமிழகத்தில் தானிய உணவு பயன்பாடு குறைந்து அரிசி பயன்பாடு அதிகரித்துள்ளது என ஜெர்மனி பல்கலைக்கழக பேராசிரியர் டெட்லெப் ப்ரைசன் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் சார்பில் "காட்சிசார் மானிடவியல், உணவு பண்பாடு' சிறப்பு கருத்தரங்கம், ஆவணப்படம் திரையிடுதல் நடந்தது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் மாணிக்கம் தலைமை வகித்தார். பிரிட்டோ வின்சென்ட் வரவேற்புரையாற்றினார்.
தொலைக்காட்சி பத்திரிகையாளரின் பார்வையில் 'காட்சிசார் மானிடவியல்' என்ற தலைப்பில் ஜெர்மனி ஆவணப்பட தயாரிப்பாளர் அன்னி ப்ரைசன் உரையாற்றினார். டார்ஜிலிங் தேயிலை உற்பத்தி, டான்சானியா காபி உற்பத்தி முறைகள், இந்திய பண்பாடு குறித்து அவர் விளக்கினார்.
ஜெர்மனி ஜஸ்டஸ் லெய்பிக் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் டெட்லெப் ப்ரைசன் பேசும்போது 16ம் நூற்றாண்டு ஜெர்மனி மக்களின் உணவு பழக்க, வழக்கங்கள், தற்போதைய உணவு முறைகள், மேல்தட்டு, உழைக்கும் வர்க்கத்தின் உணவு பழக்க, வழக்க முறைகள் குறித்து விளக்கினார். தற்போது ஜெர்மனியில் உள்ள மேல்தட்டு மக்கள் தங்களின் உணவுப் பழக்க, வழக்கத்தின் காரணமாக ஒல்லியான உடல் வாகுடன் உள்ளனர் என்றும், உழைக்கும் மக்கள் வர்க்கம் அதிக எடையுடன் காணப்படுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உணவு பழக்கங்கள் மாறியுள்ளது. தானிய உணவு வகைகளின் பயன்பாடு குறைந்து அரிசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications