மீண்டும் சென்னை உளவுப்பிரிவு இணை கமிஷனராக நல்லசிவம்-ஒரே வாரத்தில் திரும்பக் கிடைத்த பதவி
சென்னை: தமிழக காவல்துறையில் 5 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ள உத்தரவில்,
காவலர் நலத்துறை ஐ.ஜியாக உள்ள கருணாசாகர், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷ்னராகவும், திருநெல்வேலி மாநகர காவல்துறை கமிஷ்னர் வி. வரதராஜூ, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியாகவும் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லை சரக டி.ஐ.ஜியாக உள்ள ஆர்.எஸ்.நல்லசிவம் சென்னை நகர உளவுப் பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். நல்லசிவம் கடந்த வாரம் தான் சென்னையிலிருந்து நெல்லைக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவர் வகித்த அதே பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நகர உளவுப் பிரிவு இணை கமிஷனர் என்ற பதவியே அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சமீபத்தில் தான் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் எஸ்.பி. ஆனி விஜயா சென்னை வணிகக் குற்றங்கள் சி.ஐ.டி. பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் வி.சித்தண்ணன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணய எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications