குளத்தில் மூழ்கி சிறுவன் பலி- நண்பனைக் காக்கச் சென்ற சிறுவனும் மரணம்
அறந்தாங்கி: அறந்தாங்கியில் 2 குழந்தைகள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கீரணிபட்டியைச் சேர்ந்தவர் குமார் (34). கூலித் தொழிலாளி. அவரது மகன் வரதராஜபெருமாள் (3). அதே பகுதியில் வசிப்பவர் சங்கர். அவரது மகன் முருகேசன் (4). சகோதரர்களான சங்கரும், குமாரும் சென்னையில் உள்ள தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
வரதராஜபெருமாளும், முருகேசனும் அதே பகுதியில் உள்ள பால்வாடி மையம் ஒன்றில் சேர்க்கப்பட்டு இருந்தனர். தினமும் பால்வாடி மையத்துக்கு 2 பேரும் ஒன்றாய் சேர்ந்து சென்று, மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று காலையில் பால்வாடி மையத்திற்கு சென்ற முருகேசனும், வரதராஜபெருமாளும் மாலையில் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. 2 பேரின் பெற்றோரும் குழந்தைகளை பல இடங்களில் தேடினர். அப்போது பால்வாடி மையம் அருகே உள்ள குளக்கரையில் 2 குழந்தைகளின் உடைகள் கிடைத்தன. அந்த குளத்தில் இறங்கி தேடிய போது 2 குழந்தைகளின் உடல்களும் கிடைத்தன.
தகவல் அறிந்த புதுபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பால்வாடி முடிந்து வீடு திரும்பும் வழியில் வரதராஜ பெருமாள் குளத்தில் இறங்கியுள்ளான். அப்போது கால் தவறி குளத்தில் விழுந்த வரதராஜ பெருமாள் நீச்சல் தெரியாமல் தத்தளித்துள்ளான். அதனை கண்ட முருகேசனும் குளத்தில் குதித்துள்ளான். ஆனால் 2 பேருக்கும் நீச்சல் தெரியாமல் குளத்தில் மூழ்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications