'ஒரே ஒரு அறை தானா'..ஹசாரேவின் உருவ பொம்மையை எதிர்த்த பவார் கட்சி தொண்டர்கள்
மும்பை: மகாராஷ்டிரம் முழுவதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அன்னா ஹசாரேவின் உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரை நேற்று ஹர்விந்தர் சிங் என்ற சீக்கிய இளைஞர் கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினார்.
இது குறித்து ஹஸாரேவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, என்ன.. ஒரே ஒரு அறை தான் விழுந்ததா என்று திருப்பக் கேட்டுவிட்டு பின்னர், என்ன இருந்தாலும் இந்தத் தாக்குதல் தவறானது என்று கண்டிக்கவும் செய்தார்.
இதன் மூலம் தாக்குதலை அவர் நியாயப்படுத்த முயன்றார்.
ஹசாரேவின் இந்தக் கருத்தால் கோபமடைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இன்று அவரது உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஹசாரேவின் சொந்த ஊரான ரலேகாவ்ன் சித்திக்கு வந்த ஏராளமான தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த ஹசாரே, பவார் மீதான தாக்குதலை நான் கண்டித்துவிட்டேன். ஆனால், இப்போது இவ்வளவு கோபப்படும் நீங்கள், விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியபோது அமைதியாக இருந்தது ஏன் என்றார்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஹசாரே மீது பவாரின் கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளதால், விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் தடுக்க ஹசாரேவுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் பாதுகாப்பு-உள்துறை மறு ஆய்வு:
சரத்பவார் மீதான தாக்குதலின் எதிரொலியாக அனைத்து மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பையும் மறு ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அமைச்சர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் தனி பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உள்துறை முடிவு செய்துள்ளது.
ஹசாரேவுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை-ஓம் பூரி:
இதற்கிடையே, 3 மாதங்களுக்கு முன் ஹசாராவே ஆகா.. ஓஹோ என்று புகழ்ந்து பேசிய நடிகர் ஓம் பூரி இன்று அவரை கடுமையாக விமர்சித்தார்.
ஓம் பூரி கூறுகையில், ஹசாரே நேர்மையானவராக இருக்கலாம். ஆனால், அவரது செயல்பாடுகள் ஏற்கத்தக்க வகையில் இல்லை. அவருக்கு தொலைநோக்குப் பார்வை கூட இல்லை. நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தும் வகையிலான பார்வை வேண்டுமென்றால் ஒருவருக்கு நாட்டின் அரசியல் சட்டம் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். இது ஹசாரேவிடம் சுத்தமாக இல்லை என்றார்.
இவரே தான் ஹசாரேவை 3 மாதங்களுக்கு முன். ஹசாரே ஒரு மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா என்றெல்லாம் புகழ்ந்திருந்தார்.
ஹசாராவே பாராட்டிய பலரும் அவரையும் அவரது குழுவினரையும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், அவர்களது வரிசையில் ஓம் பூரியும் சேர்ந்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications