டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, குடும்பத்தினர் மீது மிரட்டல் வழக்கு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்துவுக்கு எதிராக மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல தேர்வாணைய அலுவலகத்திலும் 80 பேர் கொண்ட குழு தீவிர சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றின.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேலு செந்துறை என்பவர் செல்லமுத்துவுக்கு எதிராக போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
செல்லமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் எங்களுக்கு பூர்வீகமான இடத்தில் இருந்து எங்களை காலி செய்யும்படி மிரட்டி வருகின்றனர். அவ்வாறு காலி செய்யாவிட்டால் போலீசாரை விட்டு வழக்குப்பதிவு செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர் என்று அவர் தெரிவித்திருந்தார்.
தனது புகாரின்பேரில் செல்லமுத்துவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி ஆறுமுகசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் ரியாஸ் கூறியதாவது,
குழந்தைவேலு கொடுத்த புகாரின்பேரில் செல்லமுத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக செந்துறை காவல் நிலையத்தில் மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications