'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட நால்வரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது - மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை: 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட நான்கு திமுகவினரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. அவர்களை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் அது கூறியுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஏகப்பட்ட திமுகவினர் நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். பலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மதுரையில் மட்டும் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்களில் முக்கியமானர்கள் எஸ்ஸார் கோபி, ஒச்சு பாலு, அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் ஆகியோர்.
இந்த நிலையில் சமீபத்தில் பொட்டு சுரேஷ், திருவாரூர் திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் ஆகியோர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதில் சுரேஷ் வெளியே வந்து விட்டார். கலைவாணனை வேறு ஒரு வழக்கில் பிடித்து உள்ளே போட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில் அட்டாக் பாண்டி, திருச்சியைச் சேர்ந்த குடமுருட்டி சேகர், ஒச்சுபாலு, குருசாமி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தங்கள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இவர்கள் நால்வரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம்,இது செல்லாது என்று இன்று அறிவித்து தீர்ப்பளித்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications