மும்பை மார்க்கெட் வணிக வளாகத்தில் பயங்கர தீ - பல கோடி நாசம்

Subscribe to Oneindia Tamil

Fire
மும்பை: தெற்கு மும்பையின் மார்க்கெட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தெற்கு மும்பையில் க்ராஃபார்டு மார்க்கெட்பகுதியிலுள்ள ஒரு கடையில், சனிக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் அடுத்தடுத்த கடைகளுக்கு பரவிய தீ, அந்தப்பகுதியில் உள்ள நான்கிற்கும் மேற்பட்ட வணிக வளாகக் கட்டடங்களுக்கும் பரவியது. இதனால், அங்குள்ள 350க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன.

தண்ணீர் தட்டுப்பாடு

25 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைப்பதற்காக பல மணி நேரங்களாக போராடி வருகின்றன. ஆனால் தண்ணீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை. தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாகத் தீயை அணைக்கும் பணியில் இடையே தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கடைக்குள் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் மும்பை மாநகர மேயர் செட்டா ஜாதவ், மாநகர காவல்த்துறை ஆணையர் அரூப் பட்நாயக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+