For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோசடி வழக்கிலிருந்து சட்டப்படி விளக்கமளித்து வெளியில் வரவேண்டும் கிரண்பேடி! - அக்னிவேஷ்

By Shankar
Google Oneindia Tamil News

Agnivesh
டெல்லி: டெல்லி நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பதிவு செய்துள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து கிரண் பேடி முதலில் சட்டப்படி வெளியில் வந்து பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என சுவாமி அக்னிவேஷ் கூறியுள்ளார்.

கிரண்பேடி மீது ரூ 50 லட்சத்துக்கும அதிகமான மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த அவரே பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளது பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் அவர் தனது நடத்தைக்கு சரியான விளக்கம் அளித்து, தனது கெட்ட பெயரை நீக்கிக்கொள்ள வேண்டும் என அன்னா குழுவில் முன்பு மிக நெருக்கமாக இருந்த சுவாமி அக்னிவேஷ் இன்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, யாரோ ஒருவர் காவல்துறையில் புகார் கொடுத்து வழக்கு பதிவாகவில்லை. நீதிமன்றமே இதன்மேல் கவனம் கொண்டு காவல்துறைக்கு வழக்கை பதிவு செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. எனவே இதற்கு அரசை குறை சொல்வதில் அர்த்தமில்லை. நீதிமன்றத்துக்கு உரிய விளக்கம் அளித்து சட்டப்பூர்வமாக வெளியில் வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக தனது நவஜோதி தொண்டு நிறுவனத்திற்காக ஒதுக்கிய நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக கிரண் பேடி மீது இன்று டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து இதுவரை அன்னா ஹஸாரே எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Terming the registration of a case of cheating against Kiran Bedi as a "very serious matter", activist Swami Agnivesh on Sunday said the Team Anna member should explain her conduct to clear her name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X