அதிமுக அரசின் அராஜக போக்கை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம்: தேதி மாற்றம்
மதுரை: விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதியில் இருந்து 4ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன கூட்டம் நடத்தவிருக்கிறது.
இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 மாதத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி பல ஆயிரம் கோடிக்கு மேலான வரிச்சுமையை தமிழக மக்கள் மீது அரசு சுமத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று இரவோடு இரவாக பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் வரலாறு காணாத அளவிற்கு பல மடங்கு உயர்த்தியுள்ளது. இது மக்களின் வாழ்க்கையையே கேள்வி குறியாக்கியுள்ளது.
தமிழக அரசின் அரஜாக போக்கை கண்டித்து டிசம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று திமுக கழக பொதுச் செயலாளர் அறிவித்திருந்தார்.
ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கண்டன பொதுக் கூட்டம் டிசம்பர் 1ம் தேதிக்கு பதிலாக 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை உள்ள நான்கு நாட்களில் ஒரு நாளில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன கூட்டங்களை நடத்தலாம்.
5ம் தேதி முதல் 12ம் தேதி வரை உள்ள 1 வாரத்துக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகங்களின் சார்பில் தெருமுனை பிரசாரங்கள், பொதுக் கூட்டங்களை நடத்தலாம். அறிவிக்கப்பட்ட பேச்சாளர்களுக்கு புதிதாக கூட்டம் ஏற்பாடு செய்யப்படும் தேதியை மாவட்ட செயலாளர்கள் உடனே தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications