எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ரூ.520 ஓய்வூதியம்-கேரளா அரசு அறிவிப்பு
திருவனந்தபுரம்: எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 520 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக கேரளா மாநிலத்தில்தான் ஹெச்ஐவி நோயாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
கேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் குறிப்பின்படி, கேரள மாநிலத்தில், 55,167 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருச்சூர் மாநிலத்தை தொடர்ந்து பாலக்காடு மாவட்டத்தில் அதிகளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
மாத ஓய்வூதியம்
சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் வேளையில், மாநிலத்தில் இந்நோயை அறவே அகற்றும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 400 பென்சன் வழங்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இந்த பென்சன், எய்ட்ஸ் பாதித்த நோயாளிக்கோ அல்லது அவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ வழங்கப்படும். நோய் பாதித்தவர், சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்லும்போது அவருக்கு பயணப்படியாக ரூ. 120 கூடுதலாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக உம்மன்சாண்டி தெரிவித்தார்.
நாட்டிலேயே முதன் முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பென்சன் வழங்கும் திட்டம் கேரளாவில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications