திருநங்கைகளின் நலனுக்காக தனது சம்பளத்தை கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ்
கரூர்: கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் தனது சம்பளத் தொகையான ரூ.50,000 ரொக்கத்தை திருநங்கைகளுக்கு வழங்கினார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ். அவரது மாத சம்பளம் ரூ.50,000. அதை அவர் ஒவ்வொரு மாதமும் விபத்தில் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அதிமுக மூத்த உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கி வந்தார்.
இந்த நிலையில் தனது 6வது மாதச் சம்பளத்தை தனது தொகுதிக்குட்பட்ட மணவாசியில் வசிக்கும் 27 திருநங்கைகளின் நலனுக்காக வழங்கினார். சம்பளத்தை வழங்கிய அவர் திருநங்கைகளுடன் அமர்ந்து உணவு உண்டார்.
இந்த உதவியைப் பெற்றுக் கொண்ட திருநங்கைகள் தாங்கள் இருக்கும் குடிசைக்குப் பதில் வீடு கட்டித் தர வேண்டும் என்று எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications