தலித்கள் நிலத்தையும், மக்கள் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ள ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின்

முதல்வர் ஜெயலலிதா மீது நிலஅபரிப்பு வழக்கின் கீழ், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிஜிபி அலுவலகத்திற்கு இன்று அதிரடியாக வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சிறுதாவூரில் தலித்துக்களின் நிலத்தை, ஜெயலலிதா ஆக்கிரமித்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளேன். அதேபோல் நீலகிரி மாவட்டம் மலைப்பகுதியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் பொதுமக்களுக்கான பாதையை மறித்து நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அதன் மீது விசாரணை நடத்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது நிலஅபகரிப்பு வழக்கின் கீழ், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் நான் புகார் கொடுத்துள்ளேன். நான் கொடுத்திருக்கக் கூடிய புகார் என்னவென்று கேட்டால், நிலஅபகரிப்பு என்று சொன்னால், கொடநாட்டை ஜெயலலிதா தனது பினாமி மூலமாக ஆக்கிரமித்துள்ளார். இதுதான் உண்மையான நிலஅபகரிப்பு.
இதேபோல சிறுதாவூர். தலித் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய அந்தப் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு பினாமி பெயரிலே, அங்கேபோய் அடிக்கடி ஓய்வு எடுக்கிறாரே அம்மையார் ஜெயலலிதா அவர்கள். அதுதான் உள்ளபடியே நிலஅபரிப்பு. எனவே நான் இந்தப் புகாரை தருகிறேன். அவர் மீது ஏன் இன்னும் எப்ஐஆர் போடவில்லை. அவர் மீது உடனடியாக எப்ஐஆர் போட வேண்டும் என்றுதான் காவல்துறையிடம் என்னுடைய கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications