ஆசிரியர் நியமனத்திற்கு போட்டித் தேர்வு கூடாது - டாக்டர் ராமதாஸ்

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் முதல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வரை அனைவரும் போட்டித் தேர்வின் மூலமாகவே பணி அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது மட்டுமின்றி இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு தகுதி தேர்வையும் எழுத வேண்டும் என்று அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு சமூக நீதிக்கு எதிரானது. கிராமப்புறங்களைச் சேர்ந்த பட்டதாரிகளை பாதிக்கும் வகையில் இப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் இந்த முடிவு பல்கலை கழகங்களால் நடத்தப்படும் தேர்வுகளின் தரத்தை சந்தேகிப்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமின்றி போட்டித் தேர்வுகளை நடத்துவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். பணம் இருந்தால் ஆசிரியர் பணியை பெற்றுவிடலாம் என்ற நிலையை ஏற்படுத்திவிடும்.
எனவே ஏழை மற்றும் கிராமப்புற பட்டதாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இருந்தவாறு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications