கூடங்குளத்தில் மின் உற்பத்தியை உடனே துவங்க கோரி டிச. 20ல் கொடிசியா நிர்வாகிகள் உண்ணாவிரதம்

கோவை கொடிசியா அலுவலகத்தில், கோவை மாவட்ட சிறுகுறு தொழில் சங்க (கொடிசியா) தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழகத்தில் தொழில்துறையில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை உள்ளது.
கோவை மாவட்டத்தில் பவுண்டரி, பம்பு செட், மோட்டார் உதிரிபாகங்கள், வெட்கிரைண்டர் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பு போன்ற அனைத்து விதமான தொழில்களும் உள்ளன.
கோவையில் 30 க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மின்சாரம் என்பது அடிப்படையாக உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மின்சார பற்றாக்குறை இருந்து வருகின்றது.
தற்போது, ஒரு மாதமாக அறிவிக்கப்பட்ட மின்வெட்டை காட்டிலும் அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது. கூடுதலாக பல மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. ஒரு நாளுக்கு சராசரியாக 8 முதல் 10 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கினால் மட்டுமே மின்வெட்டு பிரச்னையை உடனடியாக தீர்க்க முடியும். கூடங்குளம் அணுமின் திட்ட பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறக்கவிருந்த நிலையில் சிலரது தூண்டுதலின்பேரில் அப் பகுதி மக்கள் நடத்தும் போராட்டம் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3 அனல்மின் நிலையங்களும் பழுதாகியுள்ளது. இதனால் மின்தடை நேரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை ஈடுகட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.
எனவே, கூடங்குளத்தில் மின் உற்பத்தியை உடனே துவங்க கோரி அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் மாநிலம் முழுவதும் டிசம்பர் 20 ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் டிசம்பர் 20 ந் தேதி அன்று மூடப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications