For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமநாதபுரம் திமுக எம்.பி. ரீத்திஷ் குமார் ஜாமீனில் விடுதலை

Google Oneindia Tamil News

வேலூர்: நில அபக‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட நடிகரும், தி.மு.க. எ‌ம்.‌பி.யுமான ரித்தீஷ் குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

திரைப்பட நடிகரும், ராமநாதபுரம் தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ருமான ரித்தீஷ், ரூ.1 கோடி ம‌தி‌ப்பு‌ள்ள நில‌த்தை போ‌லி ஆவண‌ம் தயா‌ரி‌த்து அபகரிப்பு செ‌ய்ததாக காஞ்‌சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுரை அடுத்த பாப்பாங்குழி கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு எ‌ன்பவ‌‌ர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இ‌ந்த புகா‌ரின‌் பேரில் ரித்தீஷை கா‌‌ஞ்‌சிபுர‌ம் போலீசார் கைது செ‌ய்து ‌வேலூ‌ர் சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர். இந்த நிலையில், ஜாமீன் கோரி ரித்தீஷ், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், ரீத்தீஷ் , சனி, ஞாயிறு ஆ‌கிய இர‌ண்டு நா‌ட்க‌ள் காலை10. மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் அளித்து. இதனையடுத்து, வேலூர் மத்திய ‌சிறை‌யி‌ல் இருந்து ‌‌ரி‌த்‌‌தீ‌ஷ் விடுதலையானார்.

English summary
DMK MP and Actor Ritheesh Kumar has been released on bail. He was arrested in a land grabbing case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X