எல்லை தாண்டிய இந்திய குரங்கை சிறைபிடித்த பாக்.: மிருகக்காட்சி சாலையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லை தாண்டிய இந்திய குரங்கு ஒன்றை பாகிஸ்தான் சிறைபிடித்து அங்குள்ள மிருகக்காட்சி சாலையில் வைத்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த குரங்கு ஒன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவல்பூர் வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் அந்த குரங்கைப் பிடிக்க துரத்தியுள்ளனர். ஆனால் அவர்களால் முடியாமல் போக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து குரங்கை விரட்டிப் பிடித்தனர்.

அந்த குரங்கை பகவல்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் வைத்துள்ளனர். அதற்கு பாபி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதை முகமது இக்பால் என்பவர் கவனித்து வருகிறார். அவர் கூறுகையில், பாபியைப் பார்க்க பாகிஸ்தானியர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். அது ஒரு புத்திசாலி குரங்கு. 4 வயதுள்ள பாபிக்கு பழங்கள் கொடுக்கப்படுகிறது. அதன் உடல் நிலை நன்றாக உள்ளது என்றார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இருந்து எல்லையைத் தாண்டி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்குள் புறா ஒன்று வந்தது. அதைப் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த புறாவை உளவு பார்க்க பாகிஸ்தான் அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் ஆயுதப் படையினர் அதைப் பிடித்தனர்.

அந்த புறாவை உளவு பார்க்க இந்தியாவுக்குள் விட்டார்களா என்று கோணத்தில் விசாரணை நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+