கள்ளத்தொடர்பு: அடங்காத மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை
நாமக்கல்: கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ளது ஆரியூர் நாடு கிராமம். அங்குள்ள பணஞ்சாட்டுபட்டியைச் சேர்ந்தவர் மணி (50). விவசாயி. அவரது மனைவி சரஸ்வதி (40). சரஸ்வதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமிக்கும் (42) கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இது பற்றி தெரிய வந்த மணி தனது மனைவியக் கண்டித்துள்ளார். இருப்பினும் சரஸ்வதி தன் மனம் போன போக்கில் வாழ்ந்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு, அடிதடி என்று குடும்பத்தில் அமைதியே இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவும் இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி அடிதடியானது. தான் எவ்வளவு சொன்னாலும் கள்ளத்தொடர்பை விடாத மனைவி சரஸ்வதியை மணி வீட்டில் இருந்த பலாப்பழம் அறுக்கும் கத்தியால் குத்தினார். இதில் சரஸ்வதியின் குடல் சரிந்தது. அவரது முணங்கல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வாழவந்திநாடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது வீடு உட்புறமாக பூட்டியிருந்தது. கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அடுத்த அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார் மணி.
அந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு மணியின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications