அன்னிய முதலீடு ஓவர்.. இனி முல்லைப் பெரியாறு...!
டெல்லி: நாடாளுமன்றம் 4 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி துவங்கியது. குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து நாடாளுமன்றம் முடங்கிப்போயுள்ளது. 2ஜி ஊழல், கருப்புப் பண விவகாரம், தெலுங்கானா விவகாரம், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரம் ஆகியவற்றால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. மேலும் இன்று இந்த விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் மத்திய அரசு நடத்தியது.
அதில், அன்னிய முதலீடு விஷயத்தை ஒத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதை மற்ற கட்சிகள் ஏற்றுக் கொண்டன.
இந்நிலையில் நாடாளுமன்றம் 4 நாட்களுக்குப் பிறகு இன்று கூடியது. இன்று இரு அவைகளும் சுமூகமாக நடக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் இன்று முதல் நாடாளுமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்த கடும் விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அணையை கட்டியேத் தீர வேண்டும் என்று கேரள அரசும், அணை கட்டவிட மாட்டோம் என்று தமிழக அரசும் அவரவர் நிலைபாட்டில் உறுதியாக உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூடியபோதே கேரள உறுப்பினர்கள் முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை காண்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குளிர்கால கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி நிறைவடைகிறது. இந்த கூட்டத் தொடரில் பாதி்க்கும் மேற்பட்ட நாட்கள் எந்த பணியும் செய்யாமலே வீணாகிவிட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications