மதுரை அருகே அரசுப் பேருந்தில் டைம்பாம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் மேலூரை அருகே உள்ள திருவாதவூரில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்தை போலீசார் சாதரணமாக சோதனை செய்தபோது டிபன் பாக்ஸ் போல இருந்த மர்ம பார்சலை கண்டு பிடித்தனர்.
அதனை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது நண்பகல் 12 மணிக்கு வெடிக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து குண்டு முத்தம்பட்டி கண்மாய்க்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
சமீபத்தில்தான் அத்வானி சென்ற பாதையில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பேருந்தில் துப்பாக்கி குண்டுகள்
இதனிடையே பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற அரசு பேருந்தில் துப்பாக்கிகளும், குண்டுகளும் அனாதையாக கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கிகள் மற்றும் பைகளை மீட்டு திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.
போதையில் விட்டுச்சென்ற ராணுவ வீரர்
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் துப்பாக்கிகள் கன்னியாகுமரி மாவட்டம் அகதீஸ்வரம் அருகே இலத்தையாடிவிளை பகுதியை சேர்ந்த லிங்கேஷன் (வயது41) என்பவருக்குரியதும், ராணுவத்தில் 15 வருடங்கள் பணியாற்றி விட்டு கடந்த ஜுலை மாதத்தில் அவர் விருப்ப ஓய்வு பெற்றதும் தெரியவந்தது. மேலும் 2 துப்பாக்கிகளுக்கும் அவர் ராணுவத்தில் லைசென்ஸ் பெற்றிருந்ததும் தெரிந்தது. இதனையடுத்து லிங்கேஷனின் மனைவி அகிலாவை தொடர்பு கொண்ட போலீசார் துப்பாக்கிகளை பெற்று செல்லும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து திருச்சி வந்த லிங்கேசன் திருச்சி புறப்பட்டு வந்து துப்பாக்கியை கேட்டுள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், லிங்கேசனை எச்சரித்து துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். பாபர் மசூதி தினத்தன்று துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications