தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பிய கிங்ஃபிஷர் விமானம்
சென்னை: 160 பயணிகளுடன் சென்னையில் இருந்து அந்தமான் சென்ற கிங்ஃபிஷர் விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.
கிங்ஃபிஷர் விமானம் ஒன்று 160 பயணிகளுடன் இன்று காலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அந்தமான் சென்றது. அந்தமானை அடைந்ததும் விமானம் தரையிங்க முயன்றது. ஆனால் அங்கு வானிலை மோசமாக இருந்ததால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. விமானம் சற்று நேரம் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
விமானி எவ்வளவோ முயன்றும் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இதையடுத்து விமானம் காலை 9.30 மணிக்கு சென்னைக்கு திரும்பி வந்தது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தியடைந்தனர். அவர்கள் நாளை தான் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமானில் இருந்து சென்னைக்கு வரக் காத்திருந்த 147 பயணிகள் விமானம் திரும்பியதால் ஏமாற்றம் அடைந்தனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications