பாக். அதிபர் சர்தாரிக்கு மாரடைப்பு: பதவி விலகத் திட்டம்?
வாஷிங்டன்: பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடல் நலக் குறைவு காரணமாக அவர் அதிபர் பதவியில் இருந்து விலகக்கூடும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் நம்புகின்றன என்று செய்தி வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது பிள்ளைகளைப் பார்க்கவும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் நேற்று மாலை பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்றார்.
வழக்கமாக நடக்கும் மருத்துவ பரிசோதனைக்காகத் தான் சர்தாரி துபாய் சென்றுள்ளதாக அவரது மருத்தவர் சல்மான் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 5ம் தேதி இரவு சர்தாரிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதையடுத்து தான் அவர் துபாய் சென்றுள்ளதாகவும் அமெரிக்க அரசுக்கு தகவல் வந்ததாக முன்னாள் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 26ம் தேதி அமெரி்க்க அதிபர் ஒபாமா சர்தாரியை தொடர்பு கொண்டு நேட்டோ தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பேசினார் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் புரட்சி மூலம் தனது பதவியைப் பறிக்க முயல்வதாகவும், அதற்காக தனக்கு உதவுமாறும் சர்தாரி அமெரி்க்க உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதிய பிரச்சனை குறித்து சர்தாரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசவிருந்தார். இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்தே சர்தாரி படு டென்ஷனாக காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.
சர்தாரி அதிபர் பதவியில் இருந்து விலகக்கூடும் என்று அட்லாண்டிக் கவுன்சிலில் உள்ள தெற்காசிய மையத் தலைவர் ஷுஜா நவாஸ் தெரிவி்ததார். ஆனால் சர்தாரி பதவி விலகுவதாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவி்த்துள்ளார்.
தாலிபான்களுக்கு நன்றி:
முஹர்ரம் அன்று ஷியா முஸ்லிம்களைத் தாக்காமல் இருந்ததற்காக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தாலிபான்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஷியா முஸ்லிம்களின் சடங்குகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களைத் தாக்காமல் இருந்ததற்காக நான் தாலிபான்களு்ககு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தாலிபான்கள்
எதிர்காலத்திலும் அமைதியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு நாட்டின் பாதுகாப்புக்காக எங்களுடன் சேர்ந்து பாடுபடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications