தூத்துக்குடியில் கொத்தனார் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதிய விபத்தில் பலியான கொத்தனார் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் முருகேசன் (53). கொத்தனராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று நெல்லையில் அரசு பேருந்து அவர் மீது மோதியதில் பலியானார். இது குறித்து அவரது மனைவி தூத்துக்குடி நீதிமன்றத்தில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு எதிராக இழப்பீட்டு தொகை கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பேருந்து மோதி பலியான முருகேசன் குடும்பத்துக்கு ரூ.3,23,000 இழப்பீட்டு தொகையை, ஏழரை சதவீத வட்டி மற்றும் வழக்கு செலவு தொகையை சேர்த்து மொத்தம் ரூ.4,32,000யாக வழங்க வேண்டும் என்று போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால் இழப்பீட்டு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனால் முருகேசனின் மனைவி நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பிரபுதாஸ் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து நீதிமன்ற அமினா நடராஜன் தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். தமிழக போக்குவரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றது முதல் அரசு பேருந்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications