தஞ்சையில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை, 2 மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சுற்றி திரிந்த பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், முனியாண்டவர் காலனியை சேர்ந்தவர் அலெக்ஸ் (34). அதே பகுதியில் பிரபல ரவுடியாக சுற்றி திரிந்தவர். இந்த நிலையில் இன்று காலை 8.45 மணிக்கு தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் அருகே அலெக்ஸ் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழியில் தடுத்து நிறுத்திய 2 மர்மநபர்கள், பயங்கர ஆயுதங்களால் அலெக்சை சரமாரியாக வெட்டினர். அதன்பிறகு 2 மர்மநபர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அலெக்ஸ் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அலெக்சின் தம்பியும் இதேபோல வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. எனவே முன்விரோதம் காரணமாக அலெக்ஸ் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அலெக்சை வெட்டி கொலை செய்த 2 பேரும் வல்லம் பகுதியில் கரும்புக் காட்டுக்குள் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்ததுள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications