ஒரு வாரத்தில் எல்லையில் இயல்பு நிலை திரும்பும்- தமிழக, கேரள காவல் அதிகாரிகள்
கம்பம்: தமிழக, கேரள எல்லைப் பகுதியில், இன்னும் ஒரு வாரத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குமுளியில் நேற்று நடந்த தமிழக, கேரள காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இரு மாநில எல்லைப் பகுதிகளில் நிலவும் பதட்ட நிலையை தணிப்பது தொடர்பாக நேற்று மாலை குமுளியில் இரு மாநில காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்குமார் மற்றும் ஈஸ்வரன், இடுக்கி எஸ்.பி. ஜான் வர்கீஸ, டிஎஸ்பிக்கள் விஜயன், ஜிஜி மோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் பிரவீன்குமார் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கடந்த 4 நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இருமாநில மக்களுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரள மாநிலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எதுவும் செல்லவில்லை. அதேபோல் தமிழகத்துக்கும் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால் எல்லைப்பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இன்னும் ஒருவாரத்திற்குள் இந்த நிலை மாறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இருமாநில எல்லைப்பகுதி மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
இதற்கிடையே கம்பம் உள்ளிட்ட தமிழக எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து அமைதி காணப்படுகிறது. எந்தவிதமான போராட்டங்களும் நடைபெறவில்லை. இருப்பினும் அசாதாரணமான நிலை தொடர்கிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications