கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி : பிரதமர் அறிவிப்பு
புதுடெல்லி: கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பாக தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்குவதாக பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். இந்த தகவலை, பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையின் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் 89 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் ஏராளமானோர் உயிர் இழந்தது குறித்து பிரதமர் அதிர்ச்சியும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.
மேலும், பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளதாக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications