நாளை திமுக உண்ணாவிரதம்-ஸ்டாலின் தலைமையில் தாம்பரத்தில் போராட்டம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கேரள அரசைக் கண்டித்து திமுக சார்பில் நாளை மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை தாம்பரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து சமீபத்தில் கூடி விவாதித்த திமுக செயற்குழுவில், உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நாளை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும்.
சென்னையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
அன்பழகன் உண்ணாவிரதத்தை மாலை 5 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி முடித்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து 15ம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications