Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரூர் அருகே சாலையில் ஓடிய சரக்கு ஆறு: குடிமகன்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற மதுபான லாரி அரூர் அருகே உள்ள சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மதுபானங்கள் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது.

சென்னையில் இருந்து கோவை நோக்கி ஒரு மதுபான லாரி சென்றது. அந்த லாரி சேலம் அரூர் அருகே சென்றபோது எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் சென்று கோபிநாதம்பட்டியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது லாரியில் இருந்த மதுபான பாட்டில்கள் உடைந்து சாலையில் மது ஆறாக ஓடியது. மது பாட்டில் பல திசைக்கு பறந்தது. இதைக் கண்ட குடிமகன்கள் உற்சாகமாகி ஓடி வந்து மது பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 25 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் சேதம் அடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+