ஒட்டன்சத்திரத்தில் காய்கறிக் கடைகள் மூடல்-ரூ. 5 கோடி வர்த்தகம் பாதிப்பு- ஒரு காயும் கேரளா போகவில்லை

தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறி மார்க்கெட்களில் ஒன்று ஒட்டன்சத்திரத்தில் உள்ளி காந்தி காய்கறி மார்க்கெட். இங்கிருந்துதான் கேரளாவுக்கு பெருமளவில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை போகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 1000 டன் காய்கறிகள் இங்கிருந்து கேரளாவுக்கு ஏற்றுமதியாகின்றன.
கேரள அரசின் முல்லைப் பெரியாறு அணை பிடிவாதத்தால் நிலவும் அசாதாரண நிலை காரணமாக ஒட்டன்சத்திரம் மாவட்டத்திற்கு வரும் கேரள வியாபாரிகள் பெருமளவில் நின்று விட்டனர். மேலும் இங்கிருந்து கேரளாவுக்கு காய்கறிகளை அனுப்புவதையும் வியாபாரிகள் நிறுத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து இன்று ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை கடையடைப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட 200 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கேரளாவுக்கு ஒரு காயும் போகவில்லை. இந்த கடையடைப்பு காரணமாக கேரளாவுக்குப் போக வேண்டிய ரூ. 5 கோடி மதிப்புள்ள காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பவில்லை.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வர்த்தகப் பாதிப்பு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் கேரள அரசு முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடந்து கொள்ளும் முறையை கடுமையாக கண்டிக்கிறோம். கேரள அரசின் பிடிவாதம் தொடர்ந்தால் இங்கிருந்து ஒரு காயையும் அனுப்ப மாட்டோம் என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications