முல்லை பெரியாறு: கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய பாஜக கோரக்கை
கோழிக்கோடு: முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரளாவை சேர்ந்த 6 மத்திய அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரதமர் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து பாஜக கேரள மாநில தலைவர் ஜார்ஜ் குரியன் கூறியதாவது,
முல்லை பெரியாறு பிரச்சனையில் தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மத்திய அரசு அமைதியாக உள்ளது.இதனைக் கண்டித்து, கேரளாவை சேர்ந்த 6 மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்பிறகு பிரதமர் மன்மோகன் சிங் வீட்டின் முன்பு தர்ணா நடத்த வேண்டும். இதன்மூலம் கேரள காங்கிரசாரின் பலத்தை நிரூபிக்க வேண்டும்.
கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி கட்சிகளால் தான் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் இழுபறி நீடிக்கிறது. இதனால் தமிழகம், கேரள மாநிலங்களுக்கு இடையே கடந்த சில வாரங்களாக தேவையற்ற பதற்றமான நிலை ஏற்பட்டு உள்ளது.
பி.ஜே.ஜோசப், கே.எம்.மணி உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் இந்த பிரச்சனையில் மக்களுக்கு ஆத்திரத்தை தூண்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம், என்றார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications