கூடங்குளம் விவகாரம்: மத்திய-மாநில குழுக்கள் 15ம் தேதி இறுதிக்கட்ட பேச்சு
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்த இறுதிகட்ட பேச்சுவார்த்தை வரும் 15ம் தேதி நடக்கின்றது.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு, தமிழக அரசின் குழுவை சந்தித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியது. முத்துநாயகம் தலைமையிலான நிபுணர் குழு ஏற்கனவே 3 முறை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆய்வு நடத்தியது.
கடந்த முறை மாநிலக் குழுவை சந்தித்த நிபுணர் குழு, அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது, கதிர்வீச்சு அபாயம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று உறுதி செய்தது. ஆனால் மாநிலக் குழு அதை ஏற்க மறுத்து வெளியேறியது. முன்னதாக விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் கூடங்குளம் அணுமி்ன் நிலையத்தில் ஆய்வு செய்து அது பாதுகாப்பானது என்று தெரிவித்தார். போராட்டக் குழு அதையும் ஏற்கத் தயாராக இல்லை.
இந்நிலையில் நிபுணர் குழு நேற்று கூடங்குளம் சென்று அணுமின் நிலையத்தில் மீண்டும் ஆய்வு நடத்தியது. அநத குழு இன்றும் ஆய்வு செய்கிறது. இதையடுத்து வரும் 15ம் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமையிலான மாநிலக் குழுவை நிபுணர் குழு சந்தித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. மாநிலக் குழுவில் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்களும் உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையுடன் நிபுணர் குழு தனது பணியை முடித்துக் கொள்ளவிருக்கிறது என்று அணுமின் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications