சேலம் தேமுதிக எம்எல்ஏ, மனைவி மீது நில அபகரிப்பு புகார்-போலீஸ் வழக்குப் பதிவு
சேலம்: சேலத்தில் தேமுதிக எம்எல்ஏ ஆர்.மோகன்ராஜ் மீதும், அவரது மனைவி மீதும் நிலஅபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆர்.மோகன்ராஜ். சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளராகவும், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். இவர் மீது பெரமனூரை சேர்ந்த ராஜமாணிக்கம் (63) பேர்லேண்ட்ஸ் போலீசாரிடம் நிலஅபகரிப்பு புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.
அந்த புகாரில் ராஜமாணிக்கம் கூறியிருப்பதாவது,
நான் டேங்கர் லாரி வைத்து தொழில் நடத்தி வருகிறேன். கடந்த 2005ல் அழகாபுரத்தை அடுத்த ஸ்ரீராம் நகரில் எம்எல்ஏ மோகன்ராஜ் வீட்டின் அருகே உள்ள இடத்தை வாங்கினேன். அதன்பிறகு எனது 1,200 சதுர அடி நிலத்தை மோகன்ராஜூம், அவரது மனைவி உண்ணாமலை உள்ளிட்டோர் ஆக்கிரமித்து கொண்டனர்.
எனது நிலத்தை அபகரிப்பதற்காக சுற்றுசுவரை இடித்து தள்ளினர். மோகன்ராஜ் ஆக்கிரமித்த நிலத்தை திரும்ப கேட்டதற்கு, கூலிப் படையை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். நில அபகரிப்பு குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மனுவை பெற்று கொண்ட பேர்லேண்டஸ் போலீசார், ஆர்.மோகன்ராஜ் மீதும், அவரது மனைவி உண்ணாமலை மீதும் 448 (அத்துமீறி நுழைதல்), 427 (சுற்றுசுவரை இடித்து தள்ளி ஆபாச வார்த்தைகளால் திட்டுதல்), 506(2) கொலை மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications