பழனியில் கார்கள் மோதல்- ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் பலி
பழனி: பழனி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் நீதிமணி(52). இவர் மதுரைக்கு தனது காரில் சென்றார். காரை டிரைவர் முகமது இப்ராகீம் (55) என்பவர் ஓட்டினார்.
கடலூரில் இருந்து 10க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் ஒரு காரில் சபரிமலைக்கு சென்று விட்டு பழனிக்கு திரும்பி கொண்டிருந்தனர். பழனி - திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள கணக்கன்பட்டியை அடுத்த தாய்மூகாம்பிகை கோவில் அருகே வந்த போது, முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை ஐய்யப்ப பக்தர்கள் வந்த கார் ஓட்டுநர் முந்தி செல்ல முயன்றார்.
அப்போது பழனியில் இருந்து மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்த டாக்டர் நீதிமணி கார் மீது எதிர்பாராத விதமாக ஐய்யப்ப பக்தர்களின் கார் பயங்கரமாக மோதியது. இதில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் டாக்டர் நீதிமணி, டிரைவர் முகமது இப்ராகீம், ஐய்யப்ப பக்தரான கடலூர் மாவட்டம் கீழ்பருத்திக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் உடல் நசுங்கி பலியாகினர்.
மேலும் ஐய்யப்ப பக்தர்களின் காரை ஓட்டி வந்த அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் சிவக்குமார், சபரிராஜன், அருள்முருகன், சம்பத்குமார், குமார், ரஜினிகாந்த், நரேந்திரன் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications