ஏடிஜிபி ஜார்ஜை டிஸ்மிஸ் செய்யக்கோரி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்றும், அதனால் அதன் அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு பிடிவாதமாக உள்ளது. அவ்வாறு புதிய அணை கட்டவிட மாட்டோம் என்று தமிழக அரசு தீர்மானமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களு்ககு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தேனி மாவட்டம் கம்பம் மெட்டில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கேரள கூடுதல் ஏடிஜிபி ஜார்ஜ் தான் காரணம் என்று கருதப்படுகிறது. அவர் கம்பம் வந்த பிறகு தான் போலீசார் போராட்ட விஷயத்தில் தலையிட்டனர் என்று கூறப்படுகிறது.
எனவே, தடியடி நடக்க காரணமாக இருந்த ஜார்ஜை உடனே பணிநீக்கம் செய்யக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பலகட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications