நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசிய வழக்கு- விசாரிக்க நீதிபதி மறுப்பு
சென்னை: காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாலளர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் புதுச்சேரி நீதிமன்ற நீதிபதியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் பேரம் பேசிய வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இந்தக் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதை விசாரிக்கும் நீதிபதி ராமசாமியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருடன், பேரம் பேசிய டேப் வெளியானது.
இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் சுந்தரராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகுணா, புதுச்சேரி நீதிமன்றத்தில் நடக்கும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்.
ஆனால், தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி சுகுணா விசாரிக்க மனுதாரர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி முருகேசன் மறுத்துவிட்டார். சங்கராச்சாரியார் மற்றும் நீதிபதி ராமசாமி இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோவை விசாரிக்கும் கமிட்டியில் நானும் உள்ளதால், இந்த வழக்கை என்னால் விசாரிக்க முடியாது என்று நீதிபதி முருகேசன் கூறிவிட்டார்.
இதனால் இந்த விசாரணையை வேறு நீதிபதி கொண்ட பெஞ்சுக்கு மாற்றுமாறும் தலைமை நீதிபதியை நீதிபதி முருகேசன் கேட்டுக் கொண்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications