முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பிரமதருக்கு துணிச்சல் இல்லை-பாஜக
மதுரை: காவிரி பிரச்சனையில் இரு மாநிலத்திலும் பதட்டம் நிலவிய போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 2 மாநில முதல்வர்களை அழைத்து பேசி சுமூக நிலையை ஏற்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள பிரதமருக்கு அந்த துணிச்சல் இல்லை என்று பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
இது குறித்து மதுரையில் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தேசிய கட்சிகள் மாநில பிரச்சனையில் தலையிடுவது இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. தேசிய கட்சிகளுக்கும் மாநில பிரச்சனையில் அக்கறை உள்ளது. அதனால் தான் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள மக்களின் கருத்தோடு அந்த மாநில பாஜகவும் ஒத்த கருத்தை கொண்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும் தமிழக மக்களின் கருத்தோடு தமிழக பாஜக ஒத்த கருத்தை கொண்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழகத்தில் கேரளத்தவர்கள் தாக்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே முல்லை பெரியாறு அணை பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது காவிரி பிரச்சனையில் பதட்டம் நிலவியது. அப்போது வாஜ்பாய் இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பேசி சுமூக நிலையை ஏற்படுத்தினார். ஆனால் இப்போது உள்ள பிரதமருக்கு அந்த துணிச்சல் இல்லை. முல்லை பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications