எத்தனை முறை பூகம்பம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணை உடையாது: வைகோ
ராஜபாளையம்: எத்தனை முறை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணை உடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் அடிக்கடி லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலநடுக்கங்களால் அணை பலவீனமாக உள்ளது என்று கேரள அரசு தெரிவி்த்து வருகிறது. இந்நிலையில் தான் எத்தனை முறை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணை உடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது,
எத்தனை முறை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணை உடையாது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 21ம் தேதி தமிழக-கேரள எல்லைப் பகுதியில் 13 இடங்களில் மதிமுக சார்பில் அறப்போராட்டம் நடக்கவிருக்கிறது.
தமிழக-கேரள எல்லைப் பகுதிகள் அனைத்தையும் அடைத்துவிட்டால் கேரளா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்த தான் இந்த போராட்டம்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை தமிழக அரசு கையாளும் விதம் மிகச் சரியானது. கேரள அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வன்முறையைத் தூண்டிவிட்டால் அம்மாநில போலீசாரால் அணைக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. எனவே, அணைக்கு மத்திய பாதுகாப்பு படையினரை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்றார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications