பாகிஸ்தானுடன் இருப்பது கூடா நட்பாம்- ஹிலாரி கருத்து

அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நிதி உதவியை நிறுத்த முடிவு
பாகிஸ்தான் பல்வேறு துறைகளில் சீர்திருத்தம் செய்யவேண்டும். குறிப்பாக விவசாயத்துறை, எரிசக்தித்துறைகளில் திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே போட்டி நிறைந்த சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சியடைய முடியும். மேலும் பாகிஸ்தானில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒரு சிலர் மட்டுமே வருமான வரி செலுத்த முன் வருகின்றனர். ஏராளமானோர் வரிஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இது பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. எனவேதான் பாகிஸ்தானிற்கு நிதியுதவி செய்வதைக் காட்டிலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறோம்.
கூடா நட்புதான்
அமெரிக்க- பாகிஸ்தான் நாடுகளிடையே தற்போது ஸ்திரத்தன்மையற்ற நிலை இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, பாகிஸ்தான் உடனான நட்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை, இதை நாங்கள் எக்காலத்திலும் மறுப்பதற்கில்லை. பாகிஸ்தானுடனான நட்பு கூடா நட்புதான் என்றும் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications