எம்.பி.பி.எஸ் பொது நுழைவுத்தேர்வு- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி மத்திய, மாநில அரசுகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகள் என அனைத்துக்கும் பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாகும்.
நுழைவுத் தேர்வில் விலக்கு
ஆனால் மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பொது நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்ள சில ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென பல மாநிலங்கள் கேட்டுக் கொண்டன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார்.
உச்சநீதிமன்றம் குட்டு
முன்னதாக மருத்துவப் படிப்பு, மருத்துவ மேற்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் ஓராண்டு காலதாமதமாக 2013-ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் எச்.எல்,தத்து, சி.கே. பிரசாத் ஆகியோர் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் கூறியவற்றைக் கேட்ட பின்புதான் பொது நுழைவுத் தேர்வுக்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. அப்போது 2012-13-ம் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் நீங்கள் ஓராண்டு தாமதமாக நுழைவுத் தேர்வு நடத்தப் போவதாகக் கூறியுள்ளீர்கள். இந்த விவகாரத்தை நீங்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன? ஒன்று நாங்கள் உங்கள் மனுவை நிராகரிக்க வேண்டும். அல்லது நீங்களாகவே மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதே நல்லது.
இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை நீங்களே எடுத்துக் கொள்ளலாம். உங்களது முடிவுகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒரு கட்சிக்காரராக நீதிமன்றம் செயல்பட முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications